யாழ். கந்தர்மட பகுதியில் கோர விபத்து - ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Jaffna Teaching Hospital
Accident
By Theepan
யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இன்று (19) சனிக்கிழமை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பலாலி வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், ஓட்டுமட வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் கந்தர்மட சந்தியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |