யாழில் மொட்டுக் கட்சியின் பெண் அமைப்பாளர் கைது!
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மகளிர் அணி தலைவி நெல்லியடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயல்வீட்டார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த பெண் நேற்றையதினம்(18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டின் அடிப்படையில் நெல்லியடி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், விசாரணை நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள்
அயல்வீட்டாருடன் நீண்ட நாட்களாக இடம்பெற்ற தகராறு காரணமாக பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரான பெண்ணின் கணவன் மீது அயல்வீட்டார் கடந்த 16 ம் திகதி தாக்குதல் நடாத்தி அதில் அவர் காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அத்தோடு, சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் ஆகியோர் தாக்கியதாக அயல்வீட்டு பெண் ஒருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில், பொதுஜன பெரமுனக கட்சியின் அமைப்பாளரான பெண் மீது காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட அயல்வீட்டு காரரான கணவன் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கும் 14 நாள் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |