இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி (kandy) மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமாக ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (31.7.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
ஓரளவு பலத்த காற்று
வடமேல் மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் பல தடவைகள் மழைப்பெய்யக்கூடும்.

பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |