குறைந்தது பிறப்பு விகிதம் : பாடசாலைகளில் ஏற்பட்ட தாக்கம் : கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lankan Schools
By Sumithiran
தற்போது பிறப்பு வீதம் குறைந்தமையால், பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கை 50 ஆயிரமாக குறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
ஐந்து வயது நிறைவடைந்தவுடன்
பாடசாலைகளுக்கு ஐந்து வயது நிறைவடைந்தவுடன் மாணவர்களாக உள்ளீர்க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
பாடசாலைகளுக்கு தற்போது உள்ளீர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரம் பேராகும்.
50 ஆயிரமாக குறைவு
எனினும், இன்றைக்கு பத்து வருடங்களுக்கு முன்னர், பாடசாலைகளுக்கு 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் உள்ளீர்க்கப்பட்டனர் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி