நாளை முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு
People
Money
Udaya Gammanpila
SriLanka
By Chanakyan
நாளை முதல் 5000 ரூபாய் கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படும் என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.
இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடரந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று மற்றும் பயணக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தை இழந்தவர்களும் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும்.
இதேவேளை சமூர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்த கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்