தேர்தல் திணைக்களத்திற்கு வந்து குவிந்துள்ள 519 முறைப்பாடுகள்
Election Commission of Sri Lanka
Election
Sri Lanka Presidential Election 2024
By Shadhu Shanker
8 months ago
தற்போது வரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 519 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு(Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.
அதாவது ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 16 வரையிலான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினம் 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில் அவையனைத்மும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
519 முறைப்பாடுகள்
519 புகார்களில், தேசிய தேர்தல் புகார் மேலாண்மை மையம் 306, தேர்தல் புகார் மேலாண்மைக்கான மாவட்ட மையங்கள் 213 புகார்களை பெற்றுள்ளன.
அனைத்து புகார்களும் சட்ட மீறல்களாக வகைப்படுத்தப்பட்டள்ளதுடன் ஒரு வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி