ஹோட்டலில் ‘பார்ட்டி’இளம்பெண்கள் உட்பட 52 பேர் கைது
Police
Polonnaruwa
Arresth
By Vasanth
சமுக ஊடகங்கள் ஊடாக அழைப்பை ஏற்படுத்தி தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பொலனறுவை, மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் 52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 13 பெண்களும் 41 ஆண்களும் அடங்குவதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் 49 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் மூவர் கஞ்சா அருந்தியநிலையில் காணப்பட்டதை அடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நாளையதினம் ஹிங்குராகொட மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி