ஐ.நா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று(27) திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
ஐ. நா மனித உரிமைகள் குழுக் கூட்டமும் ஆரம்பமாகவுள்ள நிலையில், கூட்டத்தொடரில் தான் கலந்துகொள்ளவில்லை என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.
இலங்கை விவகாரங்கள்
மார்ச் மாதம் எட்டாம் திகதியும் ஒன்பதாம் திகதியும் இலங்கை தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர், சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, அதிபர் செயலகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கை சார்பில் ஜெனிவா செல்லவுள்ளதாகவும் இலங்கை தொடர்பான பிரேரணைகள் இம்முறை கொண்டுவரப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
