காசா சிறுவர் நிதியத்திற்கு இதுவரை 58 இலட்சம் ரூபா வரவு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக காசா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “காசா சிறுவர் நிதியத்திற்கு” (Children of Gaza Fund) இதுவரை 5 773, 512 ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டுக்கான இப்தார் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதிக்கு வழங்குமாறு அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இதற்கு மக்களின் பங்களிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமழான் மாதத்தில்
காசாவில் உள்ள சிறுவர் நிதியத்திற்கு ரமழான் மாதத்தில் பங்களிக்க விரும்பும் நன்கொடையாளர்கள் இருப்பின், அந்த நன்கொடைகளை இலங்கை வங்கி (7010), தப்ரோபன் கிளை (747) கணக்கு எண் 7040016 இல் வைப்பிலிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதிக்கு முன், அதற்கான பற்றுச்சீட்டை 077-9730396 என்ற எண்ணுக்கு (Whatsapp) மூலம் அனுப்புமாறு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மூன்று மில்லியன் ரூபா நன்கொடை
கார்கில்ஸ் குழுமத்தின் தலைவர் ரஞ்சித் பேஜ் கடந்த 28ஆம் திகதி காசாவிலுள்ள சிறுவர் நிதியத்திற்கு மூன்று மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிலையங்கள் ஊடாக இலங்கை அரசாங்கம் நன்கொடைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |