மரக்கிளை முறிந்ததால் 5 வயது சிறுமி பலி
child
dead
tree branch broken
By Kanna
மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் பலத்த காயமடைந்த 5 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
பின்னவல - நெல்லிவல பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லிவல பிரதேசத்தில் உள்ள முன்பள்ளியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒத்திகைகளில் கலந்து கொண்டு தனது தாயுடன் நடைபயணமாக வீடு திரும்பும்போதே குறித்த சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.