ரஷ்யாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் (European-Mediterranean Seismological Centre) தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 3:35 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.
காவல்துறை பேருந்நு வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம்
சுனாமி எச்சரிக்கை
இந்நிலையில் இன்றும் ஓசெர்னோவ்ஸ்கி நகருக்கு வடகிழக்கே 76 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட, இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
நில அதிர்வுகளைத் தொடர்ந்து எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
ஞானசாரர் ஆதரவு போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை : நீதிமன்ற அறிக்கையை கசக்கி எறிந்த போராட்டக்காரர்கள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |