காவல்துறை பேருந்நு வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Magistrate Court Law and Order
By Pavi Oct 16, 2026 06:00 AM GMT
Report

புதிய இணைப்பு  

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த துறவிகள் கலைந்து செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தர்.

போராட்ட களத்துக்கு காவல்துறை பருந்து வருகைத்தந்த நிலையில் தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்த கூடாரங்களை அகற்றி கலைந்து செல்ல தயாராகியுள்ளனர்.

சிறிது நேரத்திற்கு முன்னர் காவல்துறையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நிலையில் அவர்கள் வெளியேறி வருகின்றனர்.

இரண்டாம் இணைப்பு 

போரட்டத்தில் ஈடுபட்ட தேரர்களிடம் வாசிக்கப்பட்ட நீதிமன்ற அறிக்கை! கூடாரங்களை அகற்ற தயாராகும் காவல்துறை

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த துறவிகள் தலைமயிலான போராட்டகார்களிடம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்ததால் பிறப்பிக்கபட்ட உத்தரவு அறிக்கை சமர்ப்பிக்கபட்டுள்ளது. 

இதன்படி ஜனாதிபதி செயலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துறவிகளிடம், காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை வாசித்துக் காட்டி ஒப்படைத்தனர்.  

மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு 

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தத் தடை - கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

ஜனாதிபதி செயலக வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்கியிருப்பதைத் தடுக்கும் நோக்கில், உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறை தரப்பினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு விடுதலை வழங்குமாறு கோரியும் பல்வேறு பௌத்த விகாரைகளின் விகாராதிபதிகள், பிக்குகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘லொகு பெட்டி’யின் பிரதான துப்பாக்கிதாரி மரணம்: முன்னாள் காவல்துறை அதிகாரி கைது

‘லொகு பெட்டி’யின் பிரதான துப்பாக்கிதாரி மரணம்: முன்னாள் காவல்துறை அதிகாரி கைது

நீதிமன்றின் அதிரடி உத்தரவு

இந்தப் போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிக்குகள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 54 பேருக்கு எதிராகவே நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பேருந்நு வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம் | Injunction Order Protest Presidential Secretariat

உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்:

  • இன்று (ஒக்டோபர் 16) காலை 6 மணி முதல் கோட்டை காவல் பிரிவுக்குட்பட்ட கோட்டை ரயில் நிலையத்திலிருந்து செரமிக் சந்தி, அங்கிருந்து NSA சுற்றுவட்டம், பின்னர் சாரணர் மாவத்தை வழியாக காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையிலான காலி வீதியை மறிக்கக்கூடாது.
  • நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள வீதிகளில் அல்லது அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் தொடர்ச்சியாகத் தங்கியிருக்கக்கூடாது.
  • பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது.

கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகளையும் சமர்ப்பித்த தகவல்களையும் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) ஆம் பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, குறித்த நபர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்படும் குழுவினருக்கும் பொருந்தும் என நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

களுத்துறை இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!

களுத்துறை இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!

மகிந்தவின் உடல்நிலை: மருந்து கொடுக்க மனைவி வேண்டுமாம்...! அரசுக்கு மொட்டுத் தரப்பு அழுத்தம்

மகிந்தவின் உடல்நிலை: மருந்து கொடுக்க மனைவி வேண்டுமாம்...! அரசுக்கு மொட்டுத் தரப்பு அழுத்தம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016