மகிந்தவின் உடல்நிலை: மருந்து கொடுக்க மனைவி வேண்டுமாம்...! அரசுக்கு மொட்டுத் தரப்பு அழுத்தம்
மகிந்த குடும்பத்தின் முக்கிய புள்ளிகளின் கைது தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணி மனோஜ் கமகே கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணி மனோஜ் கமகே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச தற்போது நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
மனைவி அருகில் இருக்க வேண்டும்
எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் வழக்கமான முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் அவருக்கு மனைவியின் அரவணைப்பும் உதவியும் அவசியமாக இருப்பதாக மனோஜ் கமகே சுட்டிக்காட்டினார்.

“கணவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது குறைந்தபட்சம் மருந்து கொடுப்பதற்காவது மனைவி அருகில் இருக்க வேண்டும் என்பது எமது வீடுகளிலும் நாம் அறிந்த விடயம் என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சூழலில் ஷிரந்தி ராஜபக்சவைச் சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த அவர் இதனை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் வேதனையளிப்பதுடன் உணர்வுபூர்வமானதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்ட மனோஜ் கமகே முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைத்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |