விற்பனைக்கு தயார் நிலையிலிருந்து 754 கிலோ போதைப்பொருள் மீட்பு:ஒருவர் கைது
மொனராகலை, தனமல்வில, அம்பேகம பகுதியில் 754 கிலோகிராம் காய்ந்த கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே 10 கோடி ரூபாய் பெறுமதியான இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த 57 வயதான 'பத்தலஹின் மஹத்தயா' என அழைக்கப்படும் நபர் ஆவார்.
விற்பனைக்கு தயார் நிலையில்
சோதனையின்போது சந்தேக நபரின் வீட்டின் அறையொன்றில் விற்பனைக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தக் கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், தனமல்வில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |