இதயத்தை ஆரோக்கியமா பாத்துகணுமா! அப்போ இந்த எண்ணெய் ஒன்று போதும்...
பாதாம் எண்ணெய்யானது பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது . பாதாம் பழங்காலத்திலிருந்தே பயிரிடப்பட்டு வருவதோடு பின்னர் சீனா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து தோன்றி, பின்னர் மத்திய தரைக்கடல் பகுதிக்குப் பரவியுள்ளது.
பண்டைய எகிப்தில் பாதாம் எண்ணெய் பலராலும் அறியப்பட்டதுடன் மேலும், ராணி கிளியோபாட்ரா தனது சருமப் பராமரிப்புக்காக இதனைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் காலப்போக்கில், பாதாம் எண்ணெய் அதன் ஊட்டச்சத்து செழுமைக்காக ஏராளமாக மதிப்பிடப்பட்டது.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய்யானது, முதலில் சுத்தமாக்கப்படுவதுடன் அவற்றின் ஓடுகளை அகற்றி, விதைகளை மெதுவாக சூடாக்கி, பின்னர் அவற்றை ஒரு திருகில் அரைத்து பல கட்டங்களில் சுத்திகரிக்கப்பட்டு உருவாகின்றது.
அந்தவகையில், பாதாம் எண்ணெய்யின் 6 முக்கியப் பயன்பாடுகளை பற்றி அறிந்துக்கொள்வோம். பாதாம் எண்ணெய்யானது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவுவதோடு இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகின்றது.
இதனை நம்முடைய தினசரி உணவில் சேர்க்கும்போது, அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு (triglyceride)களைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது.
முக்கியப் பயன்பாடுகள்
இதனால் இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ சத்துக்களின் அளவு நிறைந்திருக்கின்றதால்,அழகுக்கலை நிபுணர்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இதில் உள்ள ஒலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள், வைட்டமின் பி மற்றும் துத்தநாகம் ஆகியவை சருமத்தின் ஊட்டச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், பாதாம் எண்ணெய் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் சருமத் தடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளதோடு அதுமட்டுமின்றி, இது நம்முடைய சருமத்தை புத்துயிரோடு வைத்துக்கொள்ளவும் உதவும்.
ஒருசில ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி அன்றாட உணவில் பாதாம் எண்ணெயைச் சேர்ப்பது, பெருங்குடல் புற்றுநோயின் வாய்ப்புகளைக் குறைக்க உதவும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
நன்மைகள்
மேலும் இது மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. பாதாம் எண்ணெயில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. இது நம்முடைய நினைவாற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது.
அதோடு, இது மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் சோர்வு ஆகியவற்றைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இது நம்முடைய தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். பாதாம் எண்ணெய் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் நம்முடைய முடியின் வலிமையையும் அடர்த்தியையும் மேம்படுத்துகிறது.
அதோடு, பொடுகு தொல்லை மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சல்களையும் கூட குறைத்து, தலைக்கு ஈரப்பதமூட்டுகிறது. முடி உதிர்தல் மற்றும் கேசப் பிளவைக் குறைக்கவும் இது உதவுகிறது.
பாதாம் எண்ணெய் நம்முடைய நகங்களை வலுப்படுத்தவும், அவை உடையாமல் இருக்கவும் உதவுகிறது. அதாவது நகங்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் உதவும் ஒரு இயற்கையான க்யூட்டிகல் எண்ணெய்யாக இதனை நாம் பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |