கனடாவில் வேலை பெற்று தருவதாக பாரிய பணமோசடி : சிக்கினார் பெண்
கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவர் வத்தளை குடா எடந்த வீதியில் வசிக்கும் பெண்ணொருவருக்கு கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறிய பெண்ணுக்கு 6,210,000.00 ரூபாவை வழங்கியதுடன், இந்தப் பெண் அவ்வப்போது தவணை முறையில் இந்தப் பணத்தைப் பெற்றுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறையீடு
பணத்தை கொடுத்துவிட்டு வேலை தர முடியாது என பெண் கூறியதால் பணம் கொடுத்தவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறையிட்டுள்ளார்.
இந்த மோசடியில் சிக்கிய நபர் கொடுத்த தகவலின் பேரில் விசாரணை அதிகாரிகள் 37 வயது திருமணமாகாத பெண்ணை கைது செய்துள்ளனர்.
இதுவரையில் பணியகத்திற்கு அவர் மீது 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், அந்த முறைப்பாடுகளின்படி அவர் மோசடி செய்த பணத்தின் தொகை 6 கோடி ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.
வங்கி அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட உயர் தொழில்களில்
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களிடம் இந்த பெண் மோசடி செய்துள்ளார், வங்கி அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட உயர் தொழில்களில் இருப்பவர்களும் இந்த மோசடியில் சிக்கியுள்ளமை விசேட அம்சமாகும்.
பணியகத்தின் செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி கனேடிய வேலைகளை வழங்குவதாக தெரிவித்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று முன்தினம் (2024.01.25) வெலிசர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஜனவரி 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |