இலங்கையின் சீரற்ற காலநிலை: 6 பேர் பலி
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் பலத்த காற்றுடனான காலநிலை நிலவி வருகின்றது.
இந்த நிலையில்,18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
புத்தளம்(Puttalam) மாவட்டத்திலேயே பெருமளவானோர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், நாடு முழுவதும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் நாளை (25) காலை வரை மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரையில் 8 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |