கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் விமான நிறுவனம்: மேலதிக கொடுப்பனவாக 8 மாத சம்பளம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனமானது, அதன் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை மேலதிக கொடுப்பனவாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு, எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைத்ததால் எட்டு மாத சம்பளத்திற்கு இணையான தொகையை மேலதிக கொடுப்பனவு வழங்க முடிவு செய்துள்ளது.
2023-24 நிதியாண்டில் விமான நிறுவனம் 1.98 பில்லியன் டொலர் (இலங்கைப் பணமதிப்பில் ரூபா. 59,032 கோடி) லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
60,000 கோடி லாபம்
எனவே, லாபத்தில் ஒரு பகுதி ஊழியர்களுக்கு போனஸாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த சீனா, ஹாங்காங், ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் எல்லைகள் ஓராண்டுக்கு முன் முழுமையாக திறக்கப்பட்ட பின்னர் இது சாத்தியமாகியுள்ளதாக விமான நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆண்டு முழுவதும் விமானப் பயணத்திற்கு தேவை இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு
கடந்த ஆண்டு, சிங்கப்பூர் ஏர்வேஸ் உலகின் சிறந்த விமான நிறுவனமாக ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன் (Skytrax World Airline Awards) விருதை வென்றது.
கடந்த 23 ஆண்டுகளில் சிங்கப்பூர் இந்த விருதை வெல்வது இது ஆறாவது முறையாகும். இந்த விருது ஊழியர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த பலன் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி Goh Choon Phong தெரிவித்துள்ளார்.
இது விமான பயணத்தை மேலும் அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், எமிரேட்ஸ் குழுமம் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்தை போனஸாக அறிவித்துள்ளது.
இந்த தொகை மே மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. கடந்த நிதியாண்டில் அதிக லாபம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |