மதுரோ கைது செய்யப்பட்டமைக்கு ஆதரவு : வெளிநாடொன்றில் 60 பேர் கைது
Nicolas Maduro
United States of America
Venezuela
Arrest
By Sumithiran
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப்படையினர் கைது செய்ததை கொண்டாடியதாகவோ அல்லது ஆதரவளித்ததாகவோ கூறப்பட்ட குறைந்தது 60 பேரை நிகரகுவா அதிகாரிகள் கைது செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவும் உள்ளூர் ஊடகங்களும் தெரிவித்தன.
அவர்களில் 49 பேர் இன்னும் காவலில் இருப்பதாகவும், அவர்களின் கதி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிகரகுவாவின் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் கைது
நிகரகுவா ஜனாதிபதி டேனியல் ஒர்டேகாவின் உத்தரவின் பேரில் நாட்டின் பாதுகாப்புப் படையினர் இந்தக் கைதுகளைச் செய்துள்ளனர்.

இருப்பினும், கைது செய்யப்பட்ட 60 பேரில் 9 பேர் நாட்டின் பாதுகாப்புப் படையினரால் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி