பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
பெருந்தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை(smart classrooms) நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சத்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையே கைச்சாத்திடப்பட்டள்ளது.
இந்நாட்டின் பெருந்தோட்ட சமூகத்தில் உள்ள டிஜிட்டல் இடைவெளியை குறைப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கையாக, நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டப் பாடசாலைகள்
அத்துடன், பெருந்தோட்டப் பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது இதன் மற்றொரு நோக்கமாகும். இதற்காக இந்திய அரசாங்கம் 508 மில்லியன் ரூபாவை மானிய உதவியை வழங்கியுள்ளது.
மேலும், இலங்கை அரசாங்கமும் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு 115 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |