வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 61,744 கோடி ரூபாய்!
தேசிய மக்கள் அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத் திட்டத்தில், மொத்த செலவீனமாக 4 இலட்சத்து 43,435கோடியே 64,68000 ரூபா காண்பிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4இலட்சத்து 21824 கோடியே 80,18000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 21610 கோடியே 84,50000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
அத்தோடு 2025 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 61,744 கோடியே 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சு
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64800 கோடி ரூபா ஒதுக்கப்பட் டுள்ளது.
இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 3055 கோடியே 50 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்ரெம்பர் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் முதலாம் வாசிப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் குறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நாடளுமன்றில் இடம்பெறும் வரவு செலவு திட்ட உரையில் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி 2ஆம் வாசிப்பை முன்வைத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |