முல்லைத்தீவு கேப்பாப்புலவில் 6.97 ஏக்கர் காணி பொதுப் பயன்பாட்டிற்காக விடுவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கெப்பாப்புலவு பகுதியில், பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டில் இருந்த சுமார் 6.97 ஏக்கர் காணி பொதுப் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இக்காணி இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான ஏ. உமாமகேஸ்வரன் முன்னிலையில் இந்தக் காணி ஒப்படைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்கை
அத்தியாவசிய தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கான காணிகளைத் தவிர, பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலுள்ள காணிகளைப் படிப்படியாக அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பதுடன், பொதுப் பயன்பாட்டிற்கும் வழங்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாதுகாப்பு அமைச்சு, இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் ஏ. உமாமகேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |