இந்த 7 உணவுகளை சாப்பிடும்போது சற்று கவனமாக இருங்கள்..!

Healthy Food Recipes
By Beulah Aug 18, 2023 03:54 AM GMT
Report

உணவு நஞ்சாதல் என்பது பெரும் பிரச்சினையாக உள்ள நிலையில், நோய்வாய்ப்படாமல் இருக்க என்ன வகையான உணவுகளை உண்ணவேண்டும் என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞரான பில் மார்லர் கடந்த 30 ஆண்டுகளாக உணவு கலப்படத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடி வருகிறார்.

ஈ.கோலை (E.coli), சால்மோனெல்லா, லிஸ்டீரியா மற்றும் பிற வகையான உணவு மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் போராடி வருகிறார்.

அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றுள்ள `விஷம்: உங்கள் உணவைப் பற்றிய அசுத்தமான உண்மைகள்` (Poisoned: The Dirty Truth About Your Food) என்ற ஆவணப்படத்திலும் அவர் தோன்றியுள்ளார்.

கெட்டுப்போன உணவை உண்பதால் ஆண்டுக்கு 6 கோடி பேர் பாதிக்கப்படுவதோடு, 4,20,000 பேர் மரணிக்கின்றனர்.

நாம் எத்தகைய உணவை உண்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று பில் மார்லர் கூறுகிறார்.

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், உணவில் சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

பதப்படுத்தப்படாத பால்

இந்த 7 உணவுகளை சாப்பிடும்போது சற்று கவனமாக இருங்கள்..! | 7 Dangerus Food In World

பதப்படுத்தப்படாத பால், பால் பொருட்கள் மற்றும் ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஸ்டெஃபனியின் நோய்க்கு காரணமான ஈ.கோலி பக்டீரியாவால் தொற்று ஏற்படும் அபாயத்தை இத்தகைய உணவு ஏற்படுத்தும்.

பாலை பச்சையாக குடிப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஒருசிலர் கருதினாலும் , அவற்றால் ஆபத்தே அதிகம். 

முளைகட்டிய பச்சைப்பயறு

இந்த 7 உணவுகளை சாப்பிடும்போது சற்று கவனமாக இருங்கள்..! | 7 Dangerus Food In World

முளைகட்டிய பச்சைப்பயறு பக்டீரியா இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன.

உலகின் மிகப்பெரிய உணவுப் பரவல் நோய்களுடன் இவை தொடர்புடையவை.

2011ஆம் ஆண்டில் வெந்தய விதைகளுடன் தொடர்புடைய பாதிப்பு ஒன்று ஜெர்மனியில் ஏற்பட்டது. இதனால் 900 பேருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதோடு 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் .

பச்சை மற்றும் சமைக்காத இறைச்சி

இந்த 7 உணவுகளை சாப்பிடும்போது சற்று கவனமாக இருங்கள்..! | 7 Dangerus Food In World

இறைச்சியை தரையில் கிடத்தும்போதோ அல்லது அவற்றை துண்டு துண்டாக வெட்டும்போதோ, இறைச்சியின் மேற்பரப்பில் உள்ள பக்டீரியா உட்புறத்திலும் செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, இறைச்சியை முழுமையாக சமைக்க வேண்டியது அவசியம்.

மேலும், ஆரோக்கியமாக இருக்கும் உங்களை நோய்வாய்ப்படவைக்க அதிக பக்டீரியாக்கள் தேவையில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் உயிரை பறிப்பதற்கு வெறும் 50 ஈ.கோலை பக்டீரியாக்களே போதும். ஊசி முனைப்போன்ற இடத்தில் கூட 1,00,000 ஈ.கோலை உள்ளன. அவற்றை உங்களாக பார்க்கவே, உணரவோ முடியாது.

எனவே, இறைச்சியை முழுமையாக சமைத்து உண்ணுவதே இதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வழி.

பழம், காய்கறிகளை கழுவாமல் மற்றும் சமைக்காமல் சாப்பிடுவதால் என்ன ஆபத்து?

இந்த 7 உணவுகளை சாப்பிடும்போது சற்று கவனமாக இருங்கள்..! | 7 Dangerus Food In World

 2006ஆம் ஆண்டளவில் கீரையுடன் தொடர்புடைய ஈ.கோலை பக்டீரியா பாதிப்பு அதிகளவில் பரவத் தொடங்கியது.

அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் பேர் உயிரிழந்தனர்.

கலிபோர்னியாவில் உள்ள ஒரு கீரைப் பண்ணைக்கும் பக்டீரியா மாசுபாட்டுக்கும் தொடர்பு இருப்பது இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருசில விலங்குகளின் மலம் போன்றவை காரணமாக கீரையில் ஈ.கோலை பக்டீரியா ஏற்பட்டது தெரியவந்தது.

அந்த பண்ணையில் இருந்து கீரை அறுவடை செய்யப்பட்டு சுத்தப்படும் மையத்துக்கு அனுப்பப்பட்டது.

அங்கு மூன்று முறை கீரை கழுவப்பட்டது. இதனால் கீரை முழுவதிலும் பரவிய ஈ.கோலை, கீரையை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்த பிற பொருட்களிலும் பரவியது.

இது நாடு முழுவதும் பரவியது, இதனால் அதனை சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர்.

மற்ற உணவுப் பொருட்களைப் போலவே கீரையும் பலர் கைகளில் மாறும்போது அது மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025