வரலாறு காணாத வீழ்ச்சியில் சிறிலங்கா!
வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பணவீக்கம் 50 வீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் நாட்டின் பணவீக்கமானது 54.6 வீதமாக பதிவாகியுள்ளது.
மே மாதம் நாட்டின் பணவீக்கமானது 30.1 வீதமாக பதிவாகியது. பணவீக்கம் இவ்வாறு அதிகரித்துள்ளமை, உணவு மற்றும் உணவுகள் அல்லாத பொருட்களின் விலைகள் மாதாந்தம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
சடுதியாக அதிகரித்த பணவீக்கம்
இதனடிப்படையில் உணவு பணவீக்கமானது மே மாதம் 57.4 வீதமாக பதிவாகியதுடன் ஜூன் மாதம் 80.1 வீதமாக அதிகரித்துள்ளது. உணவுகள் அல்லாத பொருட்களின் பணவீக்கமானது மே மாதம் 30.6 வீதமாக பதிவாகியதுடன் ஜூன் மாதம் 42.4 வீதமாக பதிவாகியுள்ளது.
உணவு பொருட்களில் பதப்படுத்தப்படாத மீன்கள், காய்கறிகள், பாண், அரிசி மற்றும் பால் மா ஆகியவற்றின் விலைகள் கடந்த ஜூன் மாதம் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் அதிகரித்த விலை
உணவுகள் அல்லாத பொருட்களின் பிரதானமாக பெட்ரோல்,டீசல், பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள், பேருந்து கட்டணங்கள், உணவகங்களின் உணவு விலைகள், ஹோட்டல் அறை வாடகைகள், கல்விக்கட்டணங்கள், வீட்டு வாடகை, குடிநீர்,மின் கட்டணங்கள் போன்றவையும் அதிகரித்தன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.