தலைவரின் வல்வெட்டித்துறை - யாழ் தமிழ் : போற்றிய தென்னிந்திய பிரபலம்
சிறு வயதிலிருந்தே வல்வெட்டித்துறை மற்றும் யாழ்ப்பாண கலாச்சார வரலாற்றை தேடி அறிந்துள்ளதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் எம். எஸ். பாஸ்கர் (M. S. Bhaskar) தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் "ஆரகன்" திரைப்படத்தின் மூலம் தென் இந்திய சினிமாவில் காலடி பதித்த "Trending Arts Productions" திரைப்பட நிறுவனம், தமது அடுத்த தயாரிப்பாக கர்மா குறுந்திரைப்படத்தினை யாழ்ப்பாணத்தில் தயாரித்து வருகின்றனர்.
"சாம் சூசைட் பண்ணப் போறான்" மற்றும் "யாழ்ப்பாணம் - A Melodic Tale" பாடலைத் தொடர்ந்து வெளியாக உள்ள "கர்மா" குறுந்திரைப்படம் தொடர்பில் யாழ் (Jaffna) ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் என்னுடைய சொந்த ஊரை ஒத்து இருக்க கூடிய கலாச்சாரம் மற்றும் பண்பாடு யாழ்ப்பாணத்திலும் உண்டு. இங்கு தமிழ் மக்களின் உணவு மற்றும் யாழப்பாண தமிழ் என்பன எனக்கு தான் சொந்த ஊரில் இருப்பது போல ஒரு உணர்வை அளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 14 மணி நேரம் முன்
