இலங்கைக்கு கடத்தவிருந்த பல இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து நேற்று இரவு (05) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள்
இதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் காவல்துறையினர் பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப் படகையும் அதிலிருந்து சுமார் 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேவேளை வலி நிவாரணி மாத்திரைகளை இலங்கைக்கு கடத்தி சென்ற பெரிய பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



