புதிய அரசியல் கட்சிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
சுமார் 70 அரசியல் கட்சிகள் புதிய பதிவுக்காக விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் பாதி விண்ணப்பங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு நேர்காணல்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
06 கட்சிகளில் பிரச்சினைகள்
அத்தோடு, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள சில அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளக கலந்துரையாடல்கள் மூலமாகவோ அல்லது நீதிமன்றம் மூலமாகவோ தீர்க்கப்பட வேண்டும் என்று சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ஜூன் 2 ஆம் திகதி நிலவரப்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தொடர்பாக 06 கட்சிகளுக்கு பிரச்சினைகள் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஐக்கிய லங்கா பொதுஜனக் கட்சி, ஐக்கிய லங்கா மகா சபைக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிங்கள தீப தேசிய முன்னணி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளே செயலாளர் பதவி தொடர்பாக பிரச்சினைகளைக் கொண்டுள்ள ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
