விசாரணைகள் நிறைவு - உண்மை நீதி எங்கே..! மாத்தளையில் போராட்டம்
Gotabaya Rajapaksa
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
மாத்தளை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
இன்று காலை பத்து மணி முதல் மாத்தளை நகரப்பகுதியில் தமது உறவுகளுக்கு நீதி கோரி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மாத்தளை மாவட்டத்தில் 1989 முதல் 1991 வரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1042 என அறிக்கையிடப்பட்டது, இதில் விசாரணைக்குட்ப்படுத்தப்பட்டது 136
கவனயீர்ப்பு நடவடிக்கை
கோட்டபாயவின் இராணுவ கட்டுப்பாட்டில் 700 சித்திரவதை முகாம்கள், 20 வெகுஜன புதைகுழி எலும்புக்கூடுகள், 154 வழக்கு விசாரணைகள் நிறைவு இருந்தாலும் உண்மை நீதி எங்கே என கோரி இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது
இதேவேளை இன்று பகல் 01 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது
















ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்