வெளிநாட்டு மாணவர்களுக்கு பேரிடி - கனடா அதிரடி நடவடிக்கை..!
Government of Canada
India
Canada
Student Visa
By Kiruththikan
கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை கனடா வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றஞ்சட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த மாணவர்கள் மோசடியான ஆவணங்களைத் தயாரித்து கனடா நாட்டின் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
அவ்வாறு சேர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள கனடா நாட்டின் தூதரகம் மற்றும் கனடாவில் உள்ள இந்திய நாட்டு தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, கனடா நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்