நாட்டில் 74 பாடசாலை கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் : கல்வியமைச்சர்
Colombo
A D Susil Premajayantha
By Beulah
பாடசாலைகளில் அமைந்துள்ள ஆபத்தான கட்டிடங்கள் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் அவதானமாக இருக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்
“கொழும்பு, தேர்ஸ்டன் கல்லூரி மற்றும் தங்காலை பாலிகா வித்தியாலயம் உட்பட 74 பாடசாலைகள் கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், இக்கட்டிடங்களில் இருந்து மாணவர்களை வெளியேற்றுமாறு குறித்த பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டிடங்கள் புனரமைக்கப்படும் வரை மாணவர்களுக்கு புதிய மாற்று இடம் வழங்கப்படவுள்ளது.”என்றார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி