அனர்த்தத்தின் கொடூரம் : நுவரெலியாவில் 75 பேர் உயிரிழப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 2,691 குடும்பங்களை சேர்ந்த 12,304 பேர் இந்த மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 1,914 குடும்பங்களை சேர்ந்த 8,654 பேர் பாதுகாப்பான 61 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள், உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்கி வருவதுடன், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் தாங்கள் உள்ள பகுதிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நுவரெலியா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் நிலைமை சீராகும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பது அவசியம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |