ஊரடங்கு சட்டத்தினை மீறிய 76ஆயிரம் பேர் கைது!
Corona
Curfew
Police
People
SriLanka
By Chanakyan
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை 6மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரப்பகுதியில் மாத்திரம் 509 பேர் கைதாகியுள்ளனர்.
மேலும் இதன்போது 25 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஒகஸ்ட் 30 முதல் இது வரையான காலப் பகுதியில் மொத்தம் 76,145 பேர் ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என சிறிலங்கா காவல்துறையின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.