இலங்கைக்கு கிடைக்கவுள்ள மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்கள்
இலங்கைக்கு அடுத்த வாரத்திற்குள் 780 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கியின் உதவியாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக, கடனாளர் மறுசீரமைப்பு பாரிஸ் கிளப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இதற்கு சீனா மற்றும் இந்தியா முன்பு அதன் ஒப்புதலை வழங்கியிருந்தன.
யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் மரணம்: வைத்தியசாலை மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
சர்வதேச நாணய நிதியம்
அதன்படி, 5.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் தொகை மறுசீரமைக்கப்படும்.
கடனாளர் மறுசீரமைப்பின் ஒப்புதலின் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு டிசம்பர் 14 ஆம் திகதி கூடவுள்ளது.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பெற்றுக்கொள்ளப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் உதவி கிடைத்த பின்னர் பொருட்களின் விலை சற்று குறையலாம் எனவும் நிதி அமைச்சு கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |