07ஆம் அறிவு திரைப்பட பாணியில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்
🛑 புதிய இணைப்பு
கொழும்பை அண்டிய கடற்கரைப் பகுதியொன்றில் நாய்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்திய வெளிநாட்டவர் அதற்குரிய காரணத்தை வெளியிட்டுள்ளார்.
நாய்களுக்கு ஊசி மூலம் குறித்த வெளிநாட்டவர் மருந்தினை உட்செலுத்துவதை அவதானித்த அப்பகுதி மக்கள் அவரிடம் விளக்கம் கோரியுள்ளனர்.
இந்தநிலையில், நாய்களுக்கு கொடுத்தது தடுப்பூசி தான் என்றும், நாய்களுக்கு நோய் வராமல் பாதுகாக்கும் நோக்குடன்தான் இதனை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் செலுத்திய மருந்து உள்ளிட்டவற்றை மக்களிடம் கொடுத்து அவர் அதற்கான விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 முதலாம் இணைப்பு
இலங்கையில் வெளிநாட்டவர் ஒருவர் மேற்கொண்ட மர்மமான செயல் ஒன்று சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தநிலையில், குறித்த வெளிநாட்டவர் கடற்கரையோரங்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ஏதோ ஒரு மருந்தினை ஊசி மூலம் செலுத்துகின்றார்.
இது குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
காணொளிகள்
கொழும்பை அண்டிய கடற்கரைப் பகுதியொன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிகமாக நாய்கள் குழுமியிருக்கும் கடற்கரையோரம் ஒன்றுக்குச் சென்ற குறித்த வெளிநாட்டவர், தனது காற்சட்டைப் பையில் இருந்து மருந்தொன்றை எடுத்து அதனை ஊசி மூலம் நாய்களுக்குச் செலுத்துகின்றார்.
வெளிநாட்டவர்
இந்தநிலையில், குறித்த வெளிநாட்டவர் யார், ஏன் இவ்வாறு நாய்களுக்கு மருந்து செலுத்துகின்றார் அத்தோடு, அது என்ன மருந்து என்பது தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் 7ஆம் அறிவு தமிழ்த் திரைப்படம் போன்று நாய்களுக்கு வைரஸ்களைப் பரப்பும் விச ஊசியினை அவர் செலுத்தி இருப்பாரோ என்ற ரீதியில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

