ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோஸ்ட் மற்றும் பக்திக்கா மாகாணங்களில் இன்று (18) அதிகாலை 3.00 மணியளவில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஸபிஹுல்லா முஜாஹித் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதிகளை இலக்கு வைத்து
அத்துடன் வீடுகளை இலக்குவைத்தே விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் தீவிரவாதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வடக்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தில் காவல் நிலையமொன்றின் மீது நேற்று முன்தினம் (16) நடத்தப்பட்ட தாக்குதலில் 7 படையினர் உயிரிழந்திருந்தனர்.
இத்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஸர்தாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 9 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்