பூசா சிறைக்குள் வீசப்பட்ட மர்ம பொதி! மீட்க்கப்பட்ட கையடக்க தொலைபேசிகள்
பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையினுள் வீசப்பட்ட பொதியொன்றில் இருந்து 08 தொலைபேசிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த விடயத்தை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகமுமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் D பிரிவில் சிறைச்சாலை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ள காவலர் இல்லத்திற்கு அருகில் நேற்று (07) ஒரு பொதி வீசப்பட்டதை சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவர் கவனித்துள்ளார்.
மேலதிக விசாரணை
இது தொடர்பாக சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டாம் வரிசை சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் அங்கிருந்து சென்று, அதிகாரிகள் குழு ஒன்று சிறப்புப் பிரிவுக்குள் நுழையும் போது விழுந்த சந்தேகத்திற்கிடமான பொதியை மீட்டெடுத்தது கண்டறியப்பட்டது.
பின்னர், ரத்கம காவல் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு, காலி கைரேகைப் பதிவுப் பணியகத்தின் அதிகாரிகளை அழைத்து வந்து, சிறப்புப் படை, சிறைச்சாலை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், பொதியை திறந்தனர்.
அப்போது, குறித்த பொதியில் 08 நவீன கைத்தொலைபேரிகள் இருந்ததாகவும், மேலதிக விசாரணைக்காக அவை சிறைச்சாலை அதிகாரிகளால் ரத்கம காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
