காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகனின் வழக்குகள் சிஐடிக்கு மாற்றம்!

CID - Sri Lanka Police Sri Lanka Police Missing Persons Jaffna Ananda Wijepala
By Sathangani Jul 08, 2025 09:32 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு இறுதியாக 2014 ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும், அச்சுவேலி காவல் நிலையப் பொறுப்பதிகாரி 17 சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்திற்கு வழக்குத் தொடர்பான உண்மைகளைப் பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பிள்ளையான் வெளியிட்ட இரகசியம்: தீவிர விசாரணையில் காவல்துறை

பிள்ளையான் வெளியிட்ட இரகசியம்: தீவிர விசாரணையில் காவல்துறை

காவல்துறைமா அதிபர் விசாரணை

வழக்கின் முன்னேற்றம் குறித்து கடந்த  ஜூன் மாதம் 3ஆம் திகதி அன்று பதில் காவல்துறைமா அதிபர் அச்சுவேலி காவல்துறை மற்றும் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.

காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகனின் வழக்குகள் சிஐடிக்கு மாற்றம்! | Disappeared Lalith Kugan Cases Transferred To Cid

அதன்படி, வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டதாக விஜேபால குறிப்பிட்டார்.

குறித்த விசாரணையை இனிமேல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு கையாளும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக குறைப்பு : வெளியான சுற்றறிக்கை

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக குறைப்பு : வெளியான சுற்றறிக்கை

 

 பதிலளித்த அமைச்சர் விஜேபால

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜேபால இவ்வாறு பதிலளித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகனின் வழக்குகள் சிஐடிக்கு மாற்றம்! | Disappeared Lalith Kugan Cases Transferred To Cid

போருக்குப் பின் காணாமல் போனவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு குறித்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னரான காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் இந்திக இதன்போது எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிரான இனவெறி பிரச்சாரம்! கனடா பிரதமரின் அறிவிப்பு

ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிரான இனவெறி பிரச்சாரம்! கனடா பிரதமரின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021