போதைப்பொருள் கடத்தல் : கெஹல் பத்தர பத்மே எழுதிய குறிப்பேடுகள் : நீதிமன்றின் உத்தரவு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே எழுதிய போதைப்பொருள் கடத்தல் குறித்த 08 குறிப்பேடுகளை தடயவியல் நிபுணரிடம் அனுப்புமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (01) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, போதைப்பொருள் வலையமைப்பு குறித்து இந்த சந்தேக நபரால் எழுதப்பட்ட 08 குறிப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.
புலனாய்வு அதிகாரிகள் கோரிக்கை நீதிமன்றின் உத்தரவு
குறிப்பேடுகளில் உள்ள கையெழுத்துக்களைப் பரிசோதனைக்காகத் தடயவியல் நிபுணரிடம் அனுப்புமாறு உத்தரவிடுமாறு புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |