ஆப்கானிஸ்தானில் உள்ள 8 இலங்கையர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்
ஆப்கானிஸ்தான் - காபூலில் உள்ள 8 இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறி கட்டார் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 3 இலங்கையர்கள் இங்கிலாந்துக்கும், 5 பேர் கட்டார் நாட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மேலும் 60 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும், அவர்களையும் மற்ற நாட்டவர்களுடன் வெளியேற்றுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இங்கிலாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்தும் இந்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆப்கானிஸ்தானின் காபூலில் இருக்கும் இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என வெளியுறவு செயலாளர் கூறினார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தப்பி ஓடிய நிலையில், அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதுடன், 20 வருட முயற்சிக்கு பலன் என்றும், கடவுளுக்கு நன்றி என்றும், சர்வதேசத்துடன் இணைந்து பயணிக்க தயார் என்றும் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.