நாளொன்றுக்கு இலங்கையர் எடுக்கும் விபரீத முடிவு : பறிபோகும் உயிர்கள்
இலங்கையில் தினமும் சுமார் 8 தற்கொலைகள் பதிவாகின்றன என்று தேசிய மனநல நிறுவனத்தின் மனநல மருத்துவர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.
அவர் இது தெடார்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை
"1996 ஆம் ஆண்டில்,100,000 க்கு 47 என தற்கொலைகளின் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தோம். அந்த நேரத்தில், ஜனாதிபதி ஆணையத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளால், நாம் மிகவும் குறைந்த நிலைக்கு வந்துள்ளோம். இப்போது அது 100,000 க்கு 15. ஆண்டுக்கு 3,500. கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் எந்த அதிகரிப்பும் இல்லை.
தற்போதும் நாளொன்றுக்கு சுமார் 8 தற்கொலைகள்
எனினும் தற்போதும் நாளொன்றுக்கு சுமார் 8 தற்கொலைகள் நடக்கின்றன. ஒன்று மட்டுமே ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் பல தற்கொலைகள் நடக்கின்றன. தற்கொலைகளில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்றாலும், இந்த சர்ச்சைக்குரிய தற்கொலைகள் இப்போதெல்லாம் நிகழ்ந்து வருகின்றன.
ஆனால் கடந்த காலத்தைப் போல ஊடகங்கள் இதுபோன்ற விஷயங்களைப் வெளியிடுவதில்லை. அது ஒரு பெரிய முன்னேற்றம்."என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 18 மணி நேரம் முன்
