வெளிநாடு சென்ற அடகுக்கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தை மோசடி செய்த அடகுக்கடை முகாமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் (Hatton) மல்லியப்புவவில் தனியார் நகை அடகு கடை ஒன்றில் பணிபுரிந்த சந்தேகநபரான முகாமையாளர் ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அடகுக் கடையின் முகாமையாளராக பல வருடங்களாக கடமையாற்றி வருவதாகவும் அடகுக் கடையின் உரிமையாளர் மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்குச் சென்று அடகுக் கடையில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தைச் சோதனையிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இதன்போது, சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அடகு கடையின் உரிமையாளர், முகாமையாளருக்கு எதிராக ஹட்டன் காவல்துறை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் நேற்று (26) முன்னிலை படுத்தியதையடுத்து, அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |