அரசுக்கு எதிராக கொழும்பில் களமிறக்கப்படவுள்ள 8000 பிக்குகள்
தற்போதைய அரசாங்கத்தின் சில தலைவர்கள் மகா சங்கத்தினரை குறிவைத்து வெளியிடும் வெறுப்பு நிறைந்த அறிக்கைகள் மற்றும் அவமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்காலத்தில் 8000 பிக்குகளை கொழும்புக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பு அபயராமயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய தேரர், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பௌத்தமும் பிக்குகளும் பல்வேறு துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறினார்.
மகாநாயக்க தேரர் வழங்கிய அறிவுரை
74% மக்கள் பௌத்தர்களாக இருக்கும் ஒரு நாட்டில், பௌத்தர்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளனர் என்றும், , ஆட்சியாளர்கள் பிக்குகள் வழங்கிய அறிவுரைகளையும், குறைந்தபட்சம் மகாநாயக்க தேரர் வழங்கிய அறிவுரைகளையும் கவனிக்காத நிலைக்கு வந்துவிட்டன என்றும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு எதிராக மகா சங்கத்தினர் பாரிய போராட்டத்தை அறிவிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |