இலங்கையில் இருந்த ஈரானிய நேவி தெஹ்ரானில்! இனி போரில் குதித்தால் அனுரவுக்கு..?
இலங்கையில் கடந்த மாத ஆரம்பத்தில் இருந்து தங்க வைக்கப்பட்டிருந்த 230 ஈரானிய கடற்படையினர் நேற்று ஈரானுக்கு மீண்டும் பறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் இதுவரை கொழும்புக்கு வெளியே நின்ற அவர்களின் பழுதடைந்த போர்க்கப்பல் திருமலைக்கு இழுத்து செல்லப்படுவதான செய்தி தொடர்பற்ற விடயங்களாக தெரியவில்லை.
சிறிலங்கா கடற்படை மையங்களில் தங்க வைக்கபட்டிருந்த ஈரானிய கடற்படையினர் அனைவரும் நேற்று ஒரு சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்காவில் இருந்து பறந்ததால்; தொழினுட்பரீதியாக புத்தாண்டு நாளில் ஒரு தலையிடி சிறிலங்காவுக்கு நீங்கியதாக கருதலாம்.எனினும் அவர்களின் புசேர் கப்பல் தலையிடி இப்போது திருமலைக்கு நகர்ந்துள்ளது.
அமெரிக்க முற்றுகையை உடைக்க தமது கடற்படை தீவிரமாக இயங்கும் என ஈரானிய கடற்படை உயர் முகங்கள் சூளுரைத்த நிலையில் ஒருவேளை இலங்கையில் சென்ற ஈரானிய கடற்படையினர் மீண்டும் சேவையில் இணைந்து அமெரிக்க கடற்படையினருக்கு எதிரான நகர்வுகளில் ஈடுபட்டால் அதன் தாக்கங்கள் இலங்கையிலும் வரக்கூடும்.
ஏனெனில் இலங்கையில் உள்ள ஈரானிய கடற்படையினரை மீண்டும் ஈரானுக்கு அனுப்பக்கூடாதென வோசிங்ரன் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்தான ஒரு செய்தி கடந்த மாதமே வோசிங்ரனின் ராஜதந்திர கேபிள்களில் கசிந்த நிலையில் இலங்கை மற்றும் மத்திய கிழக்கு விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |