யாழில் காரில் இருந்து கூரிய ஆயுதங்களுடன் இலட்ச ரூபாய் மீட்பு - சிக்கிய நபர்கள்: பறந்த உத்தரவு
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 9 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (28) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் கார் ஒன்றிலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த குழுவொன்றை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நேற்று (27) மடக்கிப் பிடித்துள்ளனர்.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இதன்போது, காரில் இருந்து கூரிய ஆயுதங்களுடன் 9 இலட்சம் ரூபாய் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 9 பேரும் கைது செய்யப்பட்டதுடன், குறித்த வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவர்கள் இன்று (28) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |