போதைப்பொருள் சோதனையில் பாரிய முறைகேடு: முக்கிய காவல்துறை தலைமைகளுக்கு இடமாற்றம்
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் (PNB) பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை அதிபர் (Senior DIG) ரன்மல் கொடிதுவக்கு உள்ளிட்ட 6 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய காவல்துறை தலைமையகம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் சுமார் 1,000 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் (ICE) போதைப்பொருள் அடங்கிய கொள்கலனைக் கைப்பற்றிய சம்பவத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் விசாரணைக் குறைபாடுகள் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இடமாற்றங்களுக்கான அனுமதியைப் பெறுவதற்காகத் தேசிய காவல்துறை ஆணைக்குழுவிடம் (National Police Commission) காவல்துறை தலைமையகம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது.
அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை
போதைப்பொருள்
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை அதிபர் ரன்மல் கொடிதுவக்கு, பிரதிப் காவல்துறை அதிபர் (DIG) அசோக தர்மசேன, பிரிவின் பணிப்பாளர் (Director), இரண்டு உதவி காவல்துறை அத்தியட்சகர்கள் (ASPs) மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) ஆகிய 6 உயர் அதிகாரிகளே இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

மேலும், கீழ்நிலை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தக் கொள்கலன் தொடர்பாகச் சிரேஷ்ட DIG ரன்மல் கொடிதுவக்குவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய PNB விசாரணைகளைத் தொடங்கியது.
அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை
மந்தகதியில் விசாரணை
எனினும், துறைமுகத்தில் ஒரு மாதமாக வைக்கப்பட்டிருந்த கொள்கலன் தொடர்பில் PNB அதிகாரிகள் மிக மந்தகதியில் விசாரணைகளை நடத்தியதாகவும், கடத்தல்காரர்கள் அதை மீண்டும் மறுஏற்றுமதி (Re-export) செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில் PNB இன் தாமதத்தை அடுத்து, காவல்துறை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (Central Crime Investigation Bureau) தனியாக விசாரணையைத் தொடங்கி, நீதிமன்ற உத்தரவு மூலம் சுங்கப் பிரிவினருடன் இணைந்து கொள்கலனைத் திறந்து சோதனையிட்டது.
அதில் 467 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் 2 பாகிஸ்தானியப் பிரஜைகள் உட்பட 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |