திடீர் சுகயீனம்! பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - யாழில் நிகழ்ந்த துயரம்
Death
Jaffna
Jaffna Teaching Hospital
SriLanka
Delf
By Chanakyan
காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட 9 மாதப் பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் டென்ஜான்சிகா என்ற 9 மாதப் பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு காய்ச்சல் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து நேற்று காலை பெற்றோர் நெடுந்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் மாற்றப்பட்டுள்ளது. எனினும் குழந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு வரும் முன்னரே உயிரிழந்துள்ளது.
விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்