சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 9 பேர் கைது
Jaffna
Kilinochchi
Mannar
Fishing
Sri Lanka Navy
By Sathangani
மாமுனை, நாகர் கோவில் கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒன்பது பேரை வெற்றிலைக்கேணி கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை மூன்று டிங்கி படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
சட்ட நடவடிக்கைகளுக்காக
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 22 வயது முதல் 49 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி