உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 90 உலக நாடுகளின் தலைவர்கள்
சுவிட்சர்லாந்தில்(Switzwerland) நடைபெறவிருக்கும் உக்ரைன் அமைதி உச்சி மாநாட்டில் 90 உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில், சுவிட்சர்லாந்தில், உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
அந்த மாநாட்டில் பங்கேற்க, 90 உலக நாடுகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்து இருப்பதாக சுவிட்சர்லாந்தின் அதிபரான வயோலா அம்ஹெர்ட்( Viola Amherd )தெரிவித்துள்ளார்.
90 உலக நாடுகளின் தலைவர்கள்
ரஷ்ய உக்ரைனை போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
உக்ரைனின் கோரிக்கையை ஏற்று சுவிட்சர்லாந்து இந்த மாநாட்டை நடத்துவதால், ரஷ்யா(Russia) அதில் பங்கேற்கப்போவதில்லை மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தைப்போலவே சுவிட்சர்லாந்தும் ரஷ்யா மீது தடைகள் விதித்ததால், அந்நாடு நடுநிலைமை நாடு அல்ல என ரஷ்யா கூற, ரஷ்யாவுக்கு அழைப்பும் இல்லை என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா முதலான நாடுகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளன. ரஷ்யாவும் உக்ரைனும் மாநாட்டில் பங்கேற்காவிட்டால் தாங்களும் பங்கேற்கமாட்டோம் என பிரேசிலும் சீனாவும் தெரிவித்துள்ளன.
சில நாடுகள் மாநாட்டில் பங்கேற்கப்போகின்றனவா இல்லையா என்பது குறித்து இதுவரை முடிவு எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |