ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்
சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி 925 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டம்
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 901 முறைப்பாடுகளும் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 89 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நாளுக்கு நாள் தேர்தல் முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தென்பகுதி வேட்பாளர்கள் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்க தயார்! சுரேஸ் பிரேமச்சந்திரன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |