09 ஆவது நிறைவேற்று அரச தலைவர் யார் -சஜித் -டலஸ் கடும் போட்டி

SJB SLPP Dullas Alahapperuma Gotabaya Rajapaksa Sajith Premadasa
By Sumithiran Jul 10, 2022 09:02 PM GMT
Report

சஜித் - டலஸ் பெயர்கள் பரிந்துரை

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (13) பதவி விலகியதன் பின்னர் புதிய அரச தலைவரை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பிளவை ஏற்படுத்தாமல் உடன்படிக்கையின் மூலம் இந்த இருவரில் ஒருவரை அரச தலைவராக நியமிப்பது தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

09 ஆவது நிறைவேற்று அரச தலைவர் யார் -சஜித் -டலஸ் கடும் போட்டி | 9Th Executive Head State Sajid Dulles Competition

இது தொடர்பான விஷேட கலந்துரையாடல் நேற்று (10) பிற்பகல் நுகேகொடையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவின் வீட்டில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயேச்சைக் குழு உட்பட பல கட்சிகள் மற்றும் குழுக்களிடையே நடைபெற்றது.ஒன்பது கூட்டுக் கட்சிகள் அடங்கிய குழு இதில் பங்கேற்றதாக தெரிய வந்தது.

 பாரிய அரசியல், பொருளாதார நெருக்கடி

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல், பொருளாதார நெருக்கடிகளை கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தில் பிளவை ஏற்படுத்தாமல் இந்த இருவரில் ஒருவரை அரச தலைவராகவும் மற்றையவரை பிரதமராகவும் நியமிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒன்பது கூட்டுக் கட்சிகள் அடங்கிய குழு நேற்று காலை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் கூடி இது தொடர்பில் கலந்துரையாடியது.

அத்துரலியே ரத்ன தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, விசேட வைத்திய கலாநிதி ஜி.வீரசிங்க, வீரசுமண வீரசிங்க, பிரேமநாத் டோலவத்த, மொஹமட் முஸம்மில், ஏ.எல்.எம்.அதாவுலா, மற்றும் கெவந்து குமாரதுங்க ஆகியோர் பஙகேற்றனர்.

இந்த கலந்துரையாடலில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு வற்புறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

09 ஆவது நிறைவேற்று அரச தலைவர் யார் -சஜித் -டலஸ் கடும் போட்டி | 9Th Executive Head State Sajid Dulles Competition

கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல்

இதேவேளை, புதிய அரச தலைவர் மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (11) சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச நாளை மறுதினம் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சபாநாயகர் பதில் அரச தலைவராக நியமிக்கப்படுவார் எனவும் புதிய அரச தலைவரை நியமிக்க நாடாளுமன்றம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் கூடும் எனவும் அறியமுடிகின்றது.

09 ஆவது நிறைவேற்று அரச தலைவர் யார் -சஜித் -டலஸ் கடும் போட்டி | 9Th Executive Head State Sajid Dulles Competition

 அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையில் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, அரச தலைவர் பதவிக்கு டலஸ் அழகப்பெருமவின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025